“திமுகவுக்கு விழுந்த மரண அடி..!” படுதோல்வி அடைந்து டெபாசிட்டை இழந்த சேது செல்வம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவுக்கு விழுந்த மரண அடி..!” படுதோல்வி அடைந்து டெபாசிட்டை இழந்த சேது செல்வம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

Published

on

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கு. சேது செல்வம் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுத் தனது டெபாசிட் தொகையை இழந்துள்ளார். லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றுத் தனது வெற்றியை உறுதி செய்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ. விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் விதிகளின்படி ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறியதால், 2,664 வாக்குகள் மட்டுமே பெற்ற திமுக வேட்பாளர் சேது கடுமையான சரிவைச் சந்தித்து டெபாசிட்டை இழந்தார். மேலும், இத்தேர்தலில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன; இது கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும். வாக்கு எண்ணிக்கை 4 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in