LATEST NEWS
விஜய் டிவி சீரியலில் களம் இறங்கும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்…. அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?…. புகைப்படத்துடன் இதோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார். இறுதிவரை விக்ரமன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அசீம் முதலிடத்தை பிடித்தார். அது மட்டுமல்லாமல் ஷிவின் வெற்றி பெறுவார் என மக்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஷிவினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.