Just miss இல்லைனா அவ்ளோ தான்…! சென்னை பினிக்ஸ் மாலில் வெங்கடேஷ் பட் மகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

Just miss இல்லைனா அவ்ளோ தான்…! சென்னை பினிக்ஸ் மாலில் வெங்கடேஷ் பட் மகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரக்‌ஷன். நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருப்பவர்கள் செஃப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பட். சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் சீசன் 4 நிறைவடைந்தது. சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைத்து தர பிரபலங்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இது விளங்குகிறது. கோமாளியாக விஜய் டிவியில் காமெடி ஷோ செய்து கொண்டிருக்கும் ஒரு சில பிரபலங்கள் பங்கேற்று நிகழ்ச்சியை ரணகள படுத்தி வருகின்றனர். டிஆர்பியிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதலிடத்தில் தான் உள்ளது.

 

Advertisement

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நடுவர்களை கூறலாம். செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். செஃப் வெங்கடேஷ் பட்டின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது, அவருக்கு திருமணமாகி 7 வருடங்கள் கழித்து தான் பெண் குழந்தை பிறந்தது. மனைவி கர்ப்பமாக இருந்த போது மது, புகை என தனக்கு இருந்த அனைத்து கெட்டப்பழக்கத்தையும் கைவிட்டாராம் வெங்கடேஷ் பட். அந்த அளவிற்கு தன் பிள்ளையின் மீது பாசம் வைத்துள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் செஃப் வெங்கடேஷ் பட்.  இவர் நேற்று தனது மகளுடன் பீனிக்ஸ் மாலில் உள்ள எஸ்கலேட்டரில் சென்றுள்ளார். அப்படி செல்லும் போது அவரின் மகளின் செருப்பு எஸ்கலேட்டரில் மாட்டி உள்ளது. அப்படியே அவரின் கால் உள்ளே செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அவர் உடனே ஷூவை கழற்றியதால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அவரின் ஷூ பலத்த சேதம் அடைந்து உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வீடியோவில் பேசி உள்ள வெங்கடேஷ் பட்,

Advertisement

‘இது வேளச்சேரி மாலில் நடந்தது. இங்கே வரும் போது கவனமாக இருங்கள். குழந்தைகளோடு வருபவர்கள் கவனமாக இருங்கள். நான் கவனமாக பிடித்து இழுக்கவில்லை என்றால் ஏதாவது நடந்து இருக்கும். இது ரொம்ப சீரியஸ் விஷயம். இப்படி எல்லாம் நடக்க கூடாது. செருப்பில் பாதி உள்ளே சென்றுவிட்டது. அப்படி இருக்கிறது அந்த படிகள். இதை பற்றி மால் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளேன். குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் கவனமாக இருங்கள். மிக பாதுகாப்பாக செல்லுங்கள். இதில் உடனே நடவடிக்கை எடுத்து மாற்ற வேண்டும். இது மிகவும் சீரியஸான விஷயம்’ என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் பட். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ssmusic Admin (@ssmusicofficial)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in