“என் வாழ்க்கைல உன்னால நிம்மதியே இல்ல…” சாவதற்கு முன் காதலி அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் சாட்..! கோடீஸ்வர தொழிலதிபர் மரணத்தில் அவிழ்ந்த திடுக்கிடும் ரகசியங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் வாழ்க்கைல உன்னால நிம்மதியே இல்ல…” சாவதற்கு முன் காதலி அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் சாட்..! கோடீஸ்வர தொழிலதிபர் மரணத்தில் அவிழ்ந்த திடுக்கிடும் ரகசியங்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள அவாத் கிரீன் அபார்ட்மெண்ட்டின் 4-வது மாடியில் இருந்து விழுந்து, 28 வயதான கோடீஸ்வர தொழிலதிபர் சிவா சர்மா உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் சிவா சர்மாவுக்கும், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மாடல் அழகி ஷ்ரத்தா துபேக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது கசிந்துள்ளன. இந்தச் சாட்களை காவல்துறையினர் வழக்குக் கோப்பில் சேர்த்து, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கசிந்துள்ள வாட்ஸ்அப் உரையாடலின் படி, சிவா சர்மாவுக்கும் ஷ்ரத்தா துபேக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. சிவாவின் மாற்றமடைந்த நடத்தையைக் குறித்து ஷ்ரத்தா தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “முன்பெல்லாம் தினமும் பலமுறை போன் மற்றும் மெசேஜ் செய்வாய், ஆனால் இப்போது அதே அக்கறையும் அன்பும் காட்டுவதில்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் ஷ்ரத்தாவின் கோபம் அதிகரித்து சிவாவைத் திட்டியதோடு, அவருக்கு எதிராகக் கொடூரமான சாப வார்த்தைகளையும் பேசியுள்ளார். இதற்குப் பதிலளித்த சிவா, “என் அன்பு குறையவில்லை, நான் பல தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறேன்” என்று தனக்கு நேர்ந்த சிரமங்களை விளக்கித் தனது உறவைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

Advertisement

அக்டோபர் 9 அன்று நடந்த இச்சம்பவத்தில், சிவாவை 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டுக்கொலை செய்துவிட்டதாக அவரது தாய் ரஞ்சனா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஷ்ரத்தா துபே முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களைக் கூறி சிவாவைப் மிரட்டிப் பணம் பறித்ததாகவும், பொய் வழக்குகளில் கைது செய்யப்போவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஷ்ரத்தா துபே, அவரது சகோதரி ரஷ்மி, டிரைவர் ஆதில் உட்பட 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அனைவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், ஷ்ரத்தா நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in