LATEST NEWS
பிரபலத்தின் நிச்சயதார்த்தத்திற்கு ஜோடியாக சென்ற சித்தார்த் அதிதி ராவ்…. வைரலாகும் புகைப்படம் (உள்ளே)….!!!!

தமிழ் சினிமாவில் பாய்ஸ், ஆயுத எழுத்து மற்றும் காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அதிதி பிறந்தநாள் அன்று சித்தார்த் எனது இதயத்தின் இளவரசையே என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ஷர்வானந்தின் நிச்சயதார்த்தத்திற்கு சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இவர்களின் காதலை உறுதி செய்துள்ளனர்.