CINEMA
சித்தார்த்-அதிதி ரெண்டு பேருக்குமே இது 2-வது திருமணம்…. சித்தார்த்தின் முதல் மனைவி இவரா…??

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி காதலித்து வந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் நேற்று பாரம்பரிய முறையில் திருமணம் முடித்துள்ளனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். சித்தார்த் மேகனா நாராயணன் என்பவரை முன்னதாக மணந்தார். அதிதி முன்னதாக சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்திருந்தார். 2003 ஆம் வருடம் சித்தார்த் பாய்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் .
அதே ஆண்டில் அவர் தனது டெல்லி வீட்டிற்கு பக்கத்தில் வசித்த காதலியான மேக்னா நாராயணன் என்பவரை மணந்தார். பின்பு அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்த நிலையில் தான் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.