LATEST NEWS
இறப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சில்க் சுமிதா கூறிய வார்த்தை… இடிந்து போன அர்ஜூன்… இதுவரை பலரும் அறியாத உருக்கமான தகவல்..!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் நடிகை சில்க் சுமிதா. இவரின் இயற்பெயர் விஜயமாலா. முதல் முதலாக 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக கொடிகட்டி பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது இவர் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் அர்ஜுனிடம் நான் செத்தால் நீ வருவியா என்று மிகவும் பரிதாபமாக சில்க் சுமிதா கேட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் தோட்டா பாவா நாராயணா சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்குக்கு நடிகர் ஒருவர் வந்தார் என்றால் அது அர்ஜுன் மட்டும் தான் என கூறியுள்ளார். ஒருநாள் படப்பிடிப்பின் போது சில்க் சுமிதா நடிகர் அர்ஜுனிடம் தான் இறந்து போனால் என்னுடைய சாவுக்கு நீ வருவியா என கேட்டுள்ளார். இதனைக் கேட்ட அர்ஜூன் என்ன பேச்சு இதெல்லாம் என கூறி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன் பிறகு ஒரு சில நாட்களில் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு அர்ஜுன் இடிந்து போனார். சில்க் ஸ்மிதாவின் உடலுக்கு மலர் மாலை அணிந்து நேரில் வந்து அர்ஜுன் இருதய அஞ்சலி செலுத்தினார். அவரின் இறுதி சடங்குக்கு வந்த ஒரே நடிகர் அர்ஜுன் மட்டும்தான் என பத்திரிக்கையாளர் தோட்ட பாவ நாராயணா கூறியுள்ளார்.