CINEMA
‘ஆகாயம் தீ புடிச்சா நிலா தூங்குமா” பாடலின் மூலம் நம்மை ஈர்த்த பாடகர் பிரதீப் குமாரின் மனைவியை பாத்துருக்கீங்களா?

தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாடகர் என்றால் அது பிரதீப் குமாரதான். திருச்சியில் பிறந்த பிரதீப் குமார் முதலில் கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சினிமா இசையிலும் பாடல்கள் பாட தொடங்கி பலரின் மனதை மயங்க வைத்தார். இவருடைய குரல் கேட்பவர்களுக்கு ஒரு புது உணர்வை தரும் வகையில் அமைந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘நினைவுகள் யாவும் நீங்கி போனால் நான் யார் மறதியா அவதியா சகதியா’இந்தப் பாடலை பிரதீப் குமார் மற்றும் ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடியிருப்பார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தில் ‘கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே’ என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் மயிலாஞ்சி பாடலும், காலா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மீட்டாத வீணை தருகின்ற ராகம் பாடலும்,
மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு’ என்ற பாடலும், இவை தவிர மாய நதி, ஆசை ஓர் புல்வெளி, ஆகாசத்த நான் பாக்குறேன் போன்ற பல சிறப்பான பாடல்களை பிரதீப் குமார் பாடியுள்ளார். இப்படி பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரதீப் குமாரின் மனைவியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது ஓணம் ஸ்பெஷலாக அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…