LATEST NEWS
பாடகர் விஜய் யேசுதாஸா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் ஏசுதாஸின் மகன் தான் விஜய் யேசுதாஸ். இவர் தன்னுடைய தந்தை போலவே சிறந்த பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து விஜய் ஏசுதாஸ் படைவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது மலையாள திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் சின்மயி நாயர் என்ற மாணவி இயக்கி வருகிறார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜய் யேசுதாஸ் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது மாசான கெட்டப்பில் போட்டோ சூட் எடுத்து அதனை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க