CINEMA
“நிறைமாத நிலவே வா வா” சின்னத்திரை நடிகை ரித்திகாவிற்கு வளைகாப்பு…. வைரலாகும் கியூட் போட்டோஸ்…!!
கோயம்புத்தூரில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பிரபலமானவர்தான் ரித்திகா தமிழ் செல்வி. கடந்த 2018 மற்றும் 19 ஆம் வருடம் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல்களின் மூலமாக சீரியல் பயணத்தை தொடங்கினார். இந்த சீரியலில் ஹீரோவின் தங்கையாக மக்களால் அறியப்பட்டார். இதனை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லேட் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்தார்.
2020 ஆம் வருடம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரித்திகாவிற்கு பெரிய புகழை தேடித்தந்தது என்றே கூறலாம். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் தொழிலதிபர் ஒருவரை ஒரு திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram