Uncategorized
ஸ்மார்ட் போனும் ஒரு போதை பழக்கம் தான் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுக்கு எனும் பழமொழிக்கு ஏற்ப ,முன் ஒரு காலத்தில் கடிதத்தில் ஆரமித்து தற்போது ஸ்மார்ட் போன் வரை அனைத்தும் தொழில் நுட்பத்தின் வித்தை தான் என்று கூறினால் அது மிகை ஆகாது .குறிப்பாக இந்த ஸ்மார்ட் போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர் கையிலும் இருக்கிறது. முன்பு குழந்தைகளுக்கு நிலவை கட்டி தான் உணவு ஊட்டும் முறை போய் தற்போது ஸ்மார்ட் போனை கட்டி தான் உணவு ஊற்றுகிறார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் தான் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை ஹேடேல்பெர்க் பல்கலை கழகத்தை சார்ந்த ஜெர்மன் பேராசிரியர்கள் 48 பேரில் மூளை எம் ஆர் ஐ ஸ்கேன்களை ஒப்பிட்டனர் அதில் 22 பேர் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
ஸ்மார்ட் போனால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் அளவு மற்றும் அடர்த்தியில் மாற்றம் காணப்படுகின்றன. மற்றோரு முடிவில் மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போதை பொருள் மற்றும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை போலவே இருப்பதாகவும் ஆய்வறிக்கை முடிவில் கூறுகிறது.