CINEMA
நான் இந்த நிலைமையில் இருக்க காரணம் மணிவண்ணன்….. சாணி அள்ள சொன்னார்…. சுந்தர் சி ஓபன் டாக்…!!

சுந்தர்.சி ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1995-ம் ஆண்டு முறை மாமன் என்ற திரைப்படம் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாணி படங்கள், பேய் படங்கள் குவிவதற்கு வித்திட்டவர். 1996-ஆம் வருடம் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், இயக்குநர் சுந்தர்.சி-க்கு மாபெரும் வெற்றியைப் பெற்று கொடுத்தது. 90 கிட்ஸ் ரசித்த காதல் கலந்த காமெடி திரைப்படம்.
இந்நிலையில் பேட்டி ஒன்றி பேசிய சுந்தர் சி, வாழ்க்கையில் இன்று நான் இந்த நிலைமையில் இருக்க காரணம் மணிவண்ணன் சார் தான். பொள்ளாச்சியில் ஒரு ஷாட் எடுக்கும் போது கேமரா முன் கிடந்த மாட்டு சாணியை நீ அள்ள மாட்டியா? என்று கெட்ட வார்த்தையால் திட்டினார். நான் முதன்முதலாக சாணி அள்ளினேன். எந்த வேலையையும் நாம் செய்ய தயங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.