சூப்பரா போன லவ்வு.. ‘பிளான் போட்டு பிரித்த நபர்கள்’!! திரிஷா – ராணா முறிவு வெளியான! ரகசியம்!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பரா போன லவ்வு.. ‘பிளான் போட்டு பிரித்த நபர்கள்’!! திரிஷா – ராணா முறிவு வெளியான! ரகசியம்!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை திரிஷா. இவர் ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள்  மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து திருப்பாச்சி ,சாமி , ஆறு போன்ற பல ஹிட் படங்களில் நடித்து தனக்கான   ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் மிகவும் புகழ் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷாவிற்கு 40 வயது ஆகிறது இருந்தாலும் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வருண்  என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை.

Advertisement

அதற்கான பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றது. இதற்கிடையே நடிகை திரிஷா தெலுங்கு நடிகரான ராணா டகுபதியை காதலித்தது பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களது காதல் முறிவுக்கு காரணம் குறித்து ஒரு தகவல் கூறப்படுகிறது. அதாவது ராணா டகுபதி  ராம நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர். செல்வாக்கு மிகுந்த குடும்பம் இவரது சித்தப்பன் தான் வெங்கடேஷ் நாகர்ஜுனா குடும்பம் ராணா குடும்பம் எல்லா உறவினர்களும் தான் அந்த பரம்பரை சேர்ந்தவர்கள் .

மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களா திருமணம் என்றால் தங்கள் சொந்தத்துக்குள்ளையே நடக்க வேண்டும் என்று யோசிப்பார்களாம் சமந்தாவை கூட முதலில் நாகார்ஜுனா குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் நாக சைதன்யா ஒற்றை காலில் நின்றுதால் மட்டும் தான் ஏற்றுக் கொண்டார்களாம். இதற்கிடையே திரிஷாவும்  ராணாவுக்கு காதல் இருப்பதை ராணா குடும்பம் சுத்தமாக விரும்பவில்லை. அதனால் தான் அவர் காதல்களை ஆரம்பத்திலேயே முறித்து விட்டார்களாம் .முக்கியமாக தெலுங்கில் திரிஷாவின் மார்க்கெட் காலியானதற்கு அந்த குடும்பம் தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement