மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை பயன்படுத்தும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை பயன்படுத்தும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா….????

Published

on

பாலிவுட் சின்னத்திரையில் நடிகர்கள் பலரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களைப் போலவே தற்போது தமிழ் சின்னத்திரையில் நடிகர் நடிகைகள் பலரும் ஆடம்பரம் மற்றும் மிக விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது குக் வித் கோமாளி மணிமேகலை தொடங்கி ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசா வரை பலரும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி யார் யார் சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஷரண்யா துரடி. இவர் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இவர் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இவரிடம் சொகுசு கார் மட்டுமல்லாமல் பைக்குகளும் பயன்பாட்டில் உள்ளது.

Advertisement

அதாவது பிஎம்டபிள்யூ ஜி310 ஜி எஸ் பிரீமியம் பைக்கை இவர் பயன்படுத்தி வருகிறார். அதன் விலை சுமார் 3.20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனைப் போலவே இவர் பயன்படுத்தி வரும் காரின் விளையும் 78 லட்சத்திற்கும் அதிகமாக இருக்குமாம்.

தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு மற்றும் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவானி நாராயணன்.

Advertisement

இவர் விளைவு இருந்தால் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இதன் விலை சுமார் 1.2 கோடிக்கும் அதிகம். மிக அதிக சொகுசு மற்றும் ப்ரீமியம் அம்சங்கள் நிறைந்த லக்சூரி கார் மாடல்தான் இது.

சினிமாவில் மாடலாக பல ஆண்டுகள் வளம் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் பாலாஜி முருகதாஸ். இவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார்.

Advertisement

செடான் ரக சொகுசு கார் தான் இது. அது மட்டுமல்லாமல் சில ஆடம்பர இருசக்கர வாகனங்களையும் இவர் பயன்படுத்தி வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் வாணி ராணி,கல்யாணப்பரிசு மற்றும் அழகிய உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் தான் அருண்குமார் ராஜன்.

Advertisement

இவர் மிக அதிக விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட மகேந்திரா தார் காரை இவர் வாங்கி இருந்தார். இவரிடம் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

அடுத்ததாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் மணிமேகலை. இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் ஒன் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார்.

Advertisement

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று இவர் புதிய காரை வாங்கி இருந்தார். இதன் விலை சுமார் 55. 36 லட்சத்திற்கும் அதிகம். இந்த விலைக்கு ஏற்ப காரில் அணைத்து வசதிகளும் உள்ளன.

சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் தான் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா தம்பதி. இவர்களிடம் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் உள்ளது. இந்த காரின் விலை சுமார் 57.20 லட்சத்திற்கும் அதிகம்.

Advertisement

இதன் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உயர்நிலை தேர்வு 63 லட்சத்திற்கு அதிகமான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலை உயர்ந்த வாகனத்தை தான் ஆலியா மானசா மற்றும் சஞ்ஜீவ் தம்பதி பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in