LATEST NEWS
மகன் பிறந்ததும் அடித்தது அதிர்ஷ்டம்…. மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு வாங்கிய அட்லீ….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தங்கள் மகனின் பெயரை அறிவித்தனர். அதாவது தங்கள் மகனுக்கு meer என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை பிறந்த கையோடு மும்பையில் 38 கோடி செலவில் புதிய வீடு ஒன்றை அட்லி மற்றும் பிரியா தம்பதி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் போனதும் அங்கேயே செட்டிலாக அட்லி புதிய வீடு வாங்கி உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதேசமயம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜபான் திரைப்படத்திற்காக அட்லி 30 கோடிக்கு மேல் சம்பளம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
