LATEST NEWS
எந்த நடிகர் இப்படி பண்ணுவாங்க…? சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் சூரி…! வைரலாகும் வீடியோ…!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.
‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.
ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் சூரி. அவர் அவ்வளவு எளிதாக இந்த உயரத்தை எட்டிவிடவில்லை . மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில், பல கஷ்டங்களை அனுபவித்தவர்.
அதே போல் பல நேரங்களில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட, பட வாய்ப்புகள் தேடியவர் சூரி. விடாமுயற்சியோடு தொடர்ந்து வாய்ப்பு தேடிய இவருக்கு ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் தான் இவர் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. இதன்மூலம் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தையும், கதையின் நாயகன் என்கிற இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளார் சூரி. இப்படி பல கஷ்டங்களை கடந்து, திரையுலகில் சாதித்தவர் நடிகர் சூரி. மிகவும் எளிமையான இரக்க குணமும் உடையவர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது பல லட்சங்கள் மதிப்புள்ள கேரவனில் ஏழை சிறுவர்களை ஏற்றி மகிழ்வித்த அழகிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram