LATEST NEWS
தளபதி ரசிகர்களின் வெறியாட்டம்… ‘லியோ’ ட்ரைலரால் ரோகினி தியேட்டருக்கு இவ்ளோ நஷ்டமா…?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்னா லியோ தான் உயிரோட வந்து சொல்லலும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது.
[irp]
2.43 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், லியோ மற்றும் பார்த்தீபன் என இரு கேரக்டரில் விஜய் நடித்துள்ளது தெரிகிறது. எப்பொழுதும் நடிகர் விஜயின் திரைப்பட ட்ரைலர் ரோகினி தியேட்டரில் தான் வெளியிடப்படும். அதேபோல லியோ திரைப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் தளபதி ரசிகர்களின் வெறியாட்டத்தால் இருக்கைகள் சேதமடைந்து, ரூ . 10 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் சார்பில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களே அதை சரிசெய்து கொள்வதாகவும், நஷ்ட ஈடு எதுவும் வேண்டாமெனவும் தெரிவித்துள்ளனர்.
[irp]
[irp]