குடும்பமே சினிமா பின்னணி…. வெளியில் தலை காட்டாமல் இருக்கும் பாக்யராஜ் மகள்…. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பமே சினிமா பின்னணி…. வெளியில் தலை காட்டாமல் இருக்கும் பாக்யராஜ் மகள்…. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகராக திகழ்வர் பாக்கியராஜ். அவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர்,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவர் முதன்முதலாக பிரவீனா என்பவரை கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் உடல் நல குறைவு காரணமாக அவர் திடீரென உயிரிழந்ததால் 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவரையும் சினிமா துறையில் அறிமுகப்படுத்திய நிலையில் சாந்தனு தனது சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் வெளிநாட்டில் படித்த போது காதலர் ஒருவர் ஏமாற்றி விட்டதால் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். ஒரு முறை அல்ல பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் பாக்கியராஜ் அவரை ஆறுதல் படுத்தினார்.

Advertisement

இதனால் வெளியில் அதிகமாக தலை காட்டாமல் இருக்கும் அவரின் மகள் குடும்ப விழாக்களில் மட்டுமே அவ்வபோது கலந்து கொண்டு வருகிறார். 37 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் ஆடை மற்றும் அணிகலன் சம்பந்தப்பட்ட ஷாப்பிங் ரீரைல்ஸ் தொழிலை செய்து வருகின்றார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in