“கொஞ்சம் உள்ளே வந்து அந்த உரத்தைக் காட்டுங்க..” கடைக்காரரை மகள் கூட்டிச் சென்ற அந்தச் சில நொடி.. தந்தை செய்த பகீர் காரியம்.. பிஜ்னோரில் நடந்த பகீர் கொள்ளை..!! – cinefeeds
Connect with us

CRIME

“கொஞ்சம் உள்ளே வந்து அந்த உரத்தைக் காட்டுங்க..” கடைக்காரரை மகள் கூட்டிச் சென்ற அந்தச் சில நொடி.. தந்தை செய்த பகீர் காரியம்.. பிஜ்னோரில் நடந்த பகீர் கொள்ளை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், உரக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற தந்தையும் மகளும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஜ்னோரில் உள்ள ஒரு உரக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போலச் சென்ற இந்தத் தந்தையும் மகளும், அங்குள்ள கடைக்காரரிடம் நயமாகப் பேசியுள்ளனர். பின்னர், கடையில் உள்ள உர வகைகளைப் பார்ப்பதற்காகத் தனது மகளைக் கடைக்காரருடன் சேர்ந்து கடையின் உள்பகுதிக்குத் தந்தை அனுப்பியுள்ளார். கடைக்காரரின் கவனம் திசை திரும்பிய அந்தச் சில நொடிகளில், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் பணத்தைத் தந்தை திருடிக்கொண்டு அங்கிருந்து நைசாகத் தப்பியுள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பிஜ்னோர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட போதிலும் தனது தந்தையுடன் சேர்ந்து தொடர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது. சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர தடயங்களின் அடிப்படையில் துப்புதுலக்கிய காவல்துறையினர், தப்பியோடிய தந்தை மற்றும் அவரது மகள் லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in