Uncategorized
அனைவருக்கும் ஏமாற்றம் தந்த தமிழக அரசு… இனி எந்தப் படமும் திரையரங்கத்தில் வராது..? என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்….

உலகம் அளவில் கொரோனா வைரஸ் நோய் நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்க்கான விழிப்புணர்வுகளும் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த வைரஸ் தமிழகத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். என்பதால் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.. சிறிய காய்ச்சல் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்னும் அரசு கண்டிப்புடன் கூறியது..
இதனால் சினிமா துறையில் புதிய படங்கள் வெளியிட பெரும் போராடி வருகின்றன.. சினிமா வட்டாரத்தில் படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அண்மையில் தியேட்டர்கள் மாநில அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் நாட்டிலும் பல மாவட்டங்கள் தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரையங்கம் மூடப்பட்ட மாவட்டங்கள்…
- நெல்லை
- கன்னியாகுமரி
- திருவள்ளூர்
- தேனி
- விருதுநகர்
- வேலூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- ஈரோடு
- நீலகிரி
- கோவை
- திருப்பூர்
- திண்டுக்கல்