CRIME
“நாட்டைக் காக்கும் போலீஸா இது..?” சிவசேனா தலைவர் அறையில் ஏஎஸ்ஐ செய்த கொடூர காரியம்.. ரகசிய சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில், சிவசேனா தலைவர் மஹந்த் காஷ்மீர் கிரியை போதைப்பொருள் வழக்கில் ஜோடிக்க முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளரின் கொடூரச் சதித்திட்டம், வீட்டில் இருந்த மறைமுக சிசிடிவி கேமரா மூலம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணா குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த ஏஎஸ்ஐ சுக்தேவ் சிங் என்பவர், சாதாரண உடையில் சிவசேனா தலைவரின் வீட்டிற்குள் நுழைந்து, படுக்கையறையில் இருந்த மெத்தைக்கு அடியில் ஒரு போதைப்பொருள் பாக்கெட்டை ரகசியமாக ஒளித்து வைத்துள்ளார். அவர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களிலேயே, சீருடை அணிந்த போலீஸ் குழுவினர் அந்த வீட்டிற்குள் அதிரடி சோதனை நடத்தி, அதே மெத்தைக்கு அடியிலிருந்து 30 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கைப்பற்றியதாகக் கூறி மஹந்தைக் கைது செய்தனர்.
கைது நடவடிக்கைக்குப் பிறகு, குடும்பத்தினர் தங்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சோதனைக் குழு வருவதற்கு முன்பே ஏஎஸ்ஐ சுக்தேவ் சிங் போதைப்பொருள் பாக்கெட்டை மெத்தைக்கு அடியில் வைக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது அம்பலமானது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியதை அடுத்து, கண்ணா பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தர்பன் அலுவாலியா உடனடியாக இந்த வழக்கில் தலையிட்டு, பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மஹந்தை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், போதைப்பொருளைப் பதுக்கிய குற்றவாளியான ஏஎஸ்ஐ சுக்தேவ் சிங் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, எஸ்பி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
