LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட முக்கிய பிரபலம்…. இனி நடிக்க போவது இவர்தான்…. வெளிவந்த புகைப்படம்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது. இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது மூர்த்தி மற்றும் தனம் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சீரியல் தொடங்கிய நாளிலிருந்து பல நடிகர் நடிகைகள் இதில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக முல்லை மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரங்கள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் என்பவர் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மகேஷ் சுப்ரமணியன் என்பவர் நடிக்க உள்ளார். அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க