“மனுஷங்க ஏன் இப்படி மிருகமா மாறுறாங்க..?” வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு நேர்ந்த அவலம்.. கண்ணீர் விட்டு கதறும் தாய் நாய்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனுஷங்க ஏன் இப்படி மிருகமா மாறுறாங்க..?” வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு நேர்ந்த அவலம்.. கண்ணீர் விட்டு கதறும் தாய் நாய்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சம்பவம்..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மாருதி குஞ்ச், டிஃபென்ஸ் காலனி பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த குட்டி நாய்கள் சிலவற்றை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொன்றுள்ள மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த தங்களது குட்டிகளின் உடல்களுக்கு அருகே, எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்தத் தாய் நாய் அழுதுகொண்டே அமர்ந்திருக்கும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத, தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தெரியாத இந்த அப்பாவி ஜீவன்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர மிருக வதைக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விபரீத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் நாய்க்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக குருகிராம் காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஹரியானா டிஜிபி ஆகியோருக்கு விலங்கின ஆர்வலர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in