VIDEOS
பல வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை அனுஷ்கா.. முதல்முறையாக அவரே கூறிய காரணம்… வெளியான வீடியோ..!!

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கில் முதலில் அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய அழகாகும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் விஜய் உடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் மற்றும் அஜித்துடன் என்னை அறிந்தால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். அதன் பிறகு அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த நிலையில் அந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவுக்கு அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலு செட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனுஷ்கா, நடிப்பிலிருந்து தான் எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளிக்கான காரணத்தை கூறியுள்ளார். பாகுபலி படத்தை தொடர்ந்து பாகமதி படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
எதிர்கால படங்களுக்காக என்னை தயார் செய்ய அந்த இடைவெளி அவசியம் என்று உணர்ந்தேன். அதனால் அந்தக் கட்டத்தில் எந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொள்ளவில்லை. உடல் எடை கூடியதும் அதற்கு ஒரு காரணம். தற்போது கதைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். நல்ல கதை அமைந்தால் எந்த மொழியாக இருந்தாலும் படத்தில் நடிப்பேன் என அனுஷ்கா தெரிவித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க