“அந்த ஒற்றர்கள் வெளியேறிட்டாங்க.. இனி நாங்க தான் கெத்து..” எஸ்.ரகுபதி உடைத்த விராலிமலை ரகசியம்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த ஒற்றர்கள் வெளியேறிட்டாங்க.. இனி நாங்க தான் கெத்து..” எஸ்.ரகுபதி உடைத்த விராலிமலை ரகசியம்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Published

on

விராலிமலை தொகுதி திமுகவில் இருந்த ஒற்றர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதால், இனி வரவிருக்கும் தேர்தல்களில் நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த காலங்களில் விராலிமலை தொகுதியில் திமுகவுக்குள் இருந்துகொண்டே சிலர் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். அந்த ஒற்றர்களைத் தன் வசம் வைத்துக்கொண்டுதான் சி.விஜயபாஸ்கர் அங்கு வெற்றி பெற்று வந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திமுகவில் துரோகம் இழைத்து வந்த அந்த ஒற்றர்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டதாக ரகுபதி குறிப்பிட்டுள்ளார். உள்ளடி வேலை பார்த்தவர்கள் தவெகவுக்குச் சென்றுவிட்டதால் இனி திமுகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என்றும், தவெக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால் இனி விராலிமலை தொகுதியில் திமுகதான் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in