CRIME
ஐயோ கடவுளே.. புறா பிடிக்கச் சென்ற 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. 6 மணி நேரமாகத் தொடரும் திக் திக் நிமிடங்கள்.. உறைந்துபோன கிராமம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில், நண்பர்களுடன் சேர்ந்து புறா பிடித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக ஆழமான கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காக்ரேரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரோஜினி நகர் பகுதியில் ரெஹான் ஷா என்ற அந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் கிணற்றில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்களும் பெற்றோரும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினரும் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் சிறுவனை மீட்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மீட்புப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சிறுவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த கிராம மக்களும் பிரார்த்தனையோடு சம்பவ இடத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
