“எந்த விஜய்யை வச்சு இழிவுபடுத்த நினைச்சாங்களோ, அதே விஜய் செஞ்ச காரியம்..” வதந்திகளுக்கு மேடையிலேயே முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்.. பரபரக்கும் அரசியல் களம்..!1 – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எந்த விஜய்யை வச்சு இழிவுபடுத்த நினைச்சாங்களோ, அதே விஜய் செஞ்ச காரியம்..” வதந்திகளுக்கு மேடையிலேயே முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்.. பரபரக்கும் அரசியல் களம்..!1

Published

on

திண்டிவனத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்குப் பிறகு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னைத் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார். விசிகவின் கூடாரமே காலி ஆகிவிட்டது என்றும், தொண்டர்கள் அனைவரும் விஜய் பின்னால் சென்றுவிட்டார்கள் என்றும் பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இப்பேச்சை அவர் முன்வைத்தார். மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முதல்வர் விஜய் தன்னைத் தொடர்புகொண்டு, “சார் மிரட்டிட்டீங்க சார், Fire சார், Fire சார்” எனத் தூய்மையான மனதோடு, எவ்விதப் பொறாமையுமின்றி வெகுவாகப் பாராட்டினார் என்று திருமாவளவன் மேடையில் குறிப்பிட்டார்.

தன்னை உளவியல் ரீதியாகத் தாக்கி சோர்ந்து போகச் செய்ய நினைப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கவே இந்தத் தகவலைப் பகிர்வதாக அவர் விளக்கம் அளித்தார். எந்த விஜய்யை வைத்துத் தன்னை இழிவுபடுத்தச் சிலர் முயன்றார்களோ, அதே விஜய்யே தனது உரையைப் பாராட்டியதன் மூலம் விசிக தொண்டர்கள் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுவதாகத் திருமாவளவன் பெருமிதத்துடன் கூறினார். அத்துடன், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தன்னை நேரில் சந்தித்து, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடவும் மற்றும் அமைச்சர் பதவியை ஏற்கவும் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பைத் தான் கறாராக மறுத்துவிட்டதாகவும் திருமாவளவன் தனது உரையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in