LATEST NEWS
“நான் எப்பவுமே இப்படிதான் சேலை கட்டுவ”… ஆண்கள் ரசிச்சா ரசிக்கட்டும்.. நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்..!!

பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவர் பல வருடங்களாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததை பலரும் விமர்சித்தனர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ரேகா நாயருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரேகா நாயர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். காலையில் பாக்கி செல்லும்போது டவுசர் போட்டுக் கொண்டுதான் போவேன்.
அந்த உடையை போட்டுக்கொண்டு நான் திநகருக்கோ மாலுக்கோ போனால் மற்றவர்கள் கை வைக்க தான் செய்வார்கள். அந்த இடத்திற்கு அந்த ஆடையை போட்டுக் கொண்டு சென்றது யாருடைய தப்பு. அதனைப் போலவே நான் எப்போதும் மாறாத இறக்கிவிட்டு தான் சேலை கட்டுவேன், அது என்னுடைய ஸ்டைல். இதை நான் ஒரு அழகியலாக பார்க்கிறேன். இதனை ஆண்கள் ரசிக்கிறார்கள் என்றால் அதில் என்ன தப்பு இருக்கிறது என்று ரேகா நாயர் வெளிப்படையாக பேசியுள்ளார்.