CINEMA
விசில் போடு….! நடிகர் சூரியின் அடுத்த படத்தின் அப்டேட்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!
ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே சூரி நடித்து வந்தார். இப்படி காமெடி நடிகராகவே பார்த்து பழகிப்போன ரசிகர்களை, விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த சூரி தனது அதிரடியானபரிமாணத்தை மூலம் பார்வையாளர்களை மிரளவைத்தார். தற்போது நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கருடன் படத்தின் மூலமாக மாபெரும் வெற்றியை தந்து விலங்கு இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் சூரி.