தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் இன்ஸ்டாலில் இரண்டு மில்லியன் ரசிகர்கள் அவருக்கு கிடைத்திருப்பது தான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Varalaxmi Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@varusarathkumar)