தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட.
எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான். வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்ற வசனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது கூல் சுரேஷ் ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் சொல்லும்போது அவர் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
எஸ்ஏசி இயக்கிய நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு மீடியா முன்பு படம் குறித்து கூல் சுரேஷ் பேசிய நிலையில் அப்போது அவர் நடிகைக்கு பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். அதை சற்று எதிர் பார்க்காத நடிகை அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.