CINEMA
புயலுக்கு பின் அமைதி…. நம்ம கொடிக்கு பின்னாடி ஒன்னு இருக்கு…. சூசகமாக சொன்ன விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தவெகவின் கட்சி பாடலும் ஒளிபரப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய் பேசி வருகிறார். அப்போது, புயலுக்கு பின் அமைதி, ஆர்ப்பாட்டம் இருக்கும்.
நம்ம கொடிக்கும் பின் ஒரு Interesting ஆன வரலாற்று குறிப்பு இருக்கு. அது என்னவென்று முதல் மாநாட்டில் கொடிக்கான விளக்கத்தை சொல்வேன் என்று சூசகமாக சொன்னார் விஜய். அதுவரை சந்தோசமாக கொண்டாடுவோம். வெறும் இது கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கல. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான ஒரு கொடி. விஜயின் ஒவ்வொரு பேச்சையும் அவருடைய தாய் ஷோபா கைதட்டி ரசித்து கவனித்து கொண்டிருந்தார்.