விஜய் டிவி ஈரோடு மகேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?…. முதல்முறையாக வெளியான எமோஷனல் வீடியோ….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி ஈரோடு மகேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?…. முதல்முறையாக வெளியான எமோஷனல் வீடியோ….!!

Published

on

அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர்தான் ஈரோடு மகேஷ். இவர் தற்போது இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த மோட்டிவேஷன் பேச்சாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஆசிரியர் பிளஸ் பேச்சாளர். அதுமட்டுமல்லாமல் தமிழில் பட்டப்படிப்பை தொடர்கிறார்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவரின் முதல் அறிமுகம் சன் டிவி என்றாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது விஜய் டிவி மூலம் தான். இவரின் நெருங்கிய நண்பர் தாடி பாலாஜி.

Advertisement

ஈரோடு மகேஷ் அம்மாவுக்கு காது கேட்காது. இவர் பிறந்ததிலிருந்தே குரலை அவரின் தாய் கேட்டதில்லை. ஈரோடு மகேஷ் சன் மியூசிக் அங்கராக வேலை செய்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தனது வாழ்க்கையில் முழு வெற்றிக்கும் தாய், மனைவி மற்றும் மகள்தான் என்று காரணம் என ஈரோடு மகேஷ் பல மேடைகளிலும் கூறியுள்ளார் .

இந்நிலையில் வருகின்ற மே 14ஆம் தேதி விஜய் டிவியில் விருதுகள் ஒளிபரப்பாக உள்ளது. அதில் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு 15 ஆண்டுகள் தொலைக்காட்சியில் நிறைவு செய்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மகேஷ் குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் வந்துள்ளனர். அப்போது தனது அம்மாவை பார்த்தவுடன் மகேஷ் கண் கலங்கி அழுகிறார். மகிழ்ச்சியுடன் தனது அம்மாவிடம் அவர் பேசுவது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://twitter.com/vijaytelevision/status/1655777266545360898

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in