“அடக்கடவுளே..! மாரடைப்பால் இறந்துட்டாரு..” கணவனைத் தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் போட்ட கொடூரத் திட்டம்… பிரேதப் பரிசோதனையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே..! மாரடைப்பால் இறந்துட்டாரு..” கணவனைத் தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் போட்ட கொடூரத் திட்டம்… பிரேதப் பரிசோதனையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த தாலிப் என்பவரின் சந்தேகத்திற்குரிய மரண வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிப்பின் மனைவி இல்மா தன் கள்ளக்காதலன் அமனுடன் சேர்ந்து, கணவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தாலிப் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி குடும்பத்தினரை நம்பவைத்து, அவரது உடலை அடக்கம் செய்திருந்தனர். இறந்து 10 நாட்களுக்குப் பிறகு சடலத்தை தோண்டி எடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீசாரின் தகவல்படி, செப்டம்பர் 28-ஆம் தேதி மீரட்டில் உள்ள வாடகை வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மனைவி இல்மா முதலில் தாலிப்பிற்கு உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார். பின்னர் தனது காதலன் அமனை வீட்டிற்கு வரவழைத்து, கணவனின் கால்களைப் பிடித்துக் கொள்ள, அமன் துப்பட்டாவால் தாலிப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதன் பிறகு, தாலிப் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி குடும்பத்தினரை நம்பவைத்து, உடலை அடக்கம் செய்ய வைத்துள்ளார்.

Advertisement

அக்டோபர் 5-ஆம் தேதி தாலிப்பின் மொபைல் போன் கிடைத்த பிறகு, அவரது குடும்பத்தினருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தாலிப்பின் சடலம் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மூச்சுத்திணறலால் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மனைவி இல்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன் அமனைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in