LATEST NEWS
அடடே சூப்பர்…. கீர்த்தி சுரேஷ் படத்தில் இந்த காமெடி நடிகரா?…. புகைப்படத்தை பார்த்து குஷியான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
பின்னர் தென்னிந்திய மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். சுமார் ஏழு வருடத்தின் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாணி காகிதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
மறுபக்கம் கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா என்ற புதுவிதமான ரோலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிக்க உள்ளார். அவருடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.