கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன…. யுவன் ஷங்கர் ராஜா போட்ட பதிவு..!! - cinefeeds
Connect with us

CINEMA

கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன…. யுவன் ஷங்கர் ராஜா போட்ட பதிவு..!!

Published

on

ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில்  50 கிலோ எடை கொண்ட பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனையை  5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதனால் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறினார் . இந்த நிலையில் உடல் எடை 100 கிராம் வரை கூடியிருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தற்போது வினேஷ் போகத் திடீர் ஒய்வை அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அதாவது, “வினோத் போகத் வென்றார் . ஆம்.. மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம், உறுதியாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in