படம் ஷூட்டிங்கை அப்புறம் பாத்துக்கலாம்.. ரசிகர்களுக்காக நடிகர் சூர்யா என்ன செய்தார் தெரியுமா..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

Uncategorized

படம் ஷூட்டிங்கை அப்புறம் பாத்துக்கலாம்.. ரசிகர்களுக்காக நடிகர் சூர்யா என்ன செய்தார் தெரியுமா..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சூர்யாவின் 42-வது படமான கங்குவா நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் தனது ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பான செயலை செய்துள்ளார்.

Advertisement

அது என்னவென்றால்,  சூர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகரில் இருக்கும் திருமண மண்டபத்தில் வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த தனது ரசிகர்களை சந்தித்தார். இதற்காக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100 பேரும், திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100 பேரும் கலந்து கொண்டனர்.

மேலும் அண்மையில் திருமணம் செய்து கொண்ட மன்ற நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மிக்ஜாம் புயலின் போது பல்வேறு உதவிகளையும் நலத்திட்டங்களையும் வழங்கிய தனது ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்ட சூர்யா நினைத்தார். நிகழ்ச்சியின் போது சூர்யா ரசிகர்களுடன் ஜாலியாக பேசினார். மேலும் அவர்களது குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Advertisement

இதனையடுத்து விருந்தின் போது அவர்களுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுடன் அமர்ந்திருந்த சூர்யா மேடையில் ஏறி பேசி அனைவரையும் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்களை கொடுத்துள்ளார். சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement