LATEST NEWS
அசத்தல் அறிவிப்பு.. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. முதல்வர் விஜய் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்..!!
தமிழக முதல்வர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குப் புதிய நல்வாழ்வுத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இக்கல்லூரி இப்பகுதி கிராமப்புற ஏழை எளிய மாணவிகளின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில் அமையவுள்ளது.
அதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி மக்களின் நீண்டகாலக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.1,439 கோடி பிரம்மாண்ட மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த இரு முக்கியத் திட்டங்களும் அந்தந்தத் தொகுதிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்புத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
