எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..? – இப்போ இதை கண்டிப்பா கவனியுங்க..! - cinefeeds
Connect with us

Uncategorized

எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..? – இப்போ இதை கண்டிப்பா கவனியுங்க..!

Published

on

பழங்களை சுவைக்கும் நாம் அதன் தோல்களின் நன்மைகளை பற்றி தெரியாமல் தூக்கி வீசி விடுவோம். ஆரஞ்சுதோல், முக சுருக்கத்தைப்போக்கவும், மாதுளை தோல், முடி உதிர்தலைத் தடுக்கவும் பயன்படுகிறது. இப்படி பழங்களில் உள்ள தோல்கள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன.

எலுமிச்சைப் பழத்தின் தோலின் நன்மைகள்: எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்ததே. ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில்தான், உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யை விட, அதன் தோலில்தான் அதிக வைட்டமின் C அதிகளவில் இருக்கிறது.

Advertisement

இதைத்தவிர, ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணமிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.

எலுமிச்சை தோலை, முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு அதனுடன் தேன் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

Advertisement

இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. மேலும் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால்,

உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்துகிறது. இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in