Uncategorized
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா”..! – இணையதளத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகையின் வீடியோ இதோ..!

ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருந்தபடியே தாங்களும் உடம்பை குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அனைவரும் விரும்பி தேடி பார்க்கிறார்கள்.
#shivaninarayanan #serialactress pic.twitter.com/CJKOWTXyj8
— Tamil360Newz (@tamil360newz) April 30, 2020