Uncategorized
தன் 18 மாத பிஞ்சு குழந்தையை தீவிபத்தில் இருந்து காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த தாய்..! 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
கரோல் மேயர் இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர். 20 ஆடுகளுக்கு முன்னர் இவருக்கு ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் கரோல் மேயரின் 18 மாத ஆண் குழந்தை ஒரு அறையில் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த அறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் தனது குழந்தையை காப்பாற்ற கரோல் மேயர் போராடியுள்ளார்.
அதன் காரணமாக அவரின் உடலில் 85% தீ காயங்கள் ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் மீண்டும் உயிர் பிழைத்து வந்தார் கரோல் மேயர். ஆனால், தீ காயங்கள் காரணமாக அவரது தலை, முகம், உடல் என அனைத்து இடங்களும் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டநிலையில், இன்று கரோல் மேயருக்கு தற்போது வயது 53. இந்நிலையில் உலகில் மிக சிறந்த புகைப்பட கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆடை இல்லாமல் தனது முழு உடலையும் தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார் இவர். மேலும், இதில் ஒரு மிக மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்,
இந்த புகைப்படங்கள் இந்த ஆண்டுக்கான மனிதத்திற்கான சிறந்த புகைப்படம் என்ற விருதினை வென்றுள்ளது தான். மேலும் கரோல் மேயர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தையை காப்பாற்றிய இவர் இந்த புகைப்படம் மூலம் தான் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
