பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! 3வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்தபோது நேர்ந்த கொடூரம்… நிலைதடுமாறி கீழே விழுந்து தொழிலாளி துடிதுடிக்க பலி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! 3வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்தபோது நேர்ந்த கொடூரம்… நிலைதடுமாறி கீழே விழுந்து தொழிலாளி துடிதுடிக்க பலி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜெய்புரியா பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, வேத் பிரகாஷ் (30) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 15 நாட்களாக அந்தப் பள்ளிக் கட்டிடத்தில் அவர் பூச்சு மற்றும் பெயிண்டிங் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி வேத் பிரகாஷ் கீழே விழுந்துள்ளார். இந்தத் திடுக்கிடும் கோர விபத்து அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் முழுமையாகப் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விபத்தில் மிகக் கடுமையான காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயரமான இடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in