Uncategorized
“யாரிடமாவது சொன்னா தோஷம் திருப்பி வந்துடும்..!” என மிரட்டி சிறுமியை சீரழித்த கொடூரம்.. போலி சாமியாரின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டம் தாக்ரே சவுக் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்வர் மஹராஜ் என்ற நபர், 17 வயது சிறுமியிடம் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அந்தத் தோஷத்தைச் சில சடங்குகள் மூலம் நிவர்த்தி செய்வதாக நம்ப வைத்து, கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிலேயே வைத்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பிணியான நிலையில், இந்த விபரத்தை யாரிடமாவது கூறினால் தோஷம் மீண்டும் வந்துவிடும் என அந்த நபர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த விபரம் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது புதிய குற்றவியல் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மாநில சட்டம் ஆகியவற்றின் கீழ் விவேகானந்த சவுக் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
