CINEMA
“கனா காணும் காலங்கள்” புது சீசன் வரப்போகிறது…. ரசிகர்களுக்கு புது அப்டேட்..!!

கனா காணும் காலங்கள் எனும் வெப் தொடர் முதலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதை களத்தோடு வந்ததால் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன் நல்ல வெற்றியையும் பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து உருவான கனா காணும் காலங்கள் வெப்சீரிஸ் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .
இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் குவிந்தது. கடந்த வருடம் இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியிட்டது. தற்போது இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சீரிஸில் நடிக்க உள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றி விவரங்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.