Uncategorized
நடை பயிற்சிக்காக சென்றபோது போலீசார் கூடியிருப்பதைக் கண்ட தந்தை…? இளம் பெண் தூக்குபோட்டு கொண்ட உண்மை !….

அடர்ந்த புதர்களுக்கு நடுவேய் ஒரு 17 வயது இளம் பெண் தூக்கிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பத்தி எனும் பதில் கிடைக்க வில்லை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது நாயுடன் நடைபயிற்சிக்காக சென்ற ஒருவர் ஓரிடத்தில் கூட்டமாக போலீசார் நிற்பதைக் கண்டதோடு, அந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும் அறிந்துகொண்டார்.ஆனால் அங்கு போலீசார் கூடியிருப்பதே தன் மகள் தூக்குப்போட்டு இறந்ததால்தான் என்ற உண்மை சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.
இங்கிலாந்தின் Ashtonஐச் சேர்ந்த மார்க், அதிகாலையில் நடை பயிற்சிக்காக சென்றபோது, புதர் அடர்ந்த ஒரு பகுதியில் பொலிசார் நிற்பதையும், அவ்விடம் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருப்பதையும் கண்டார். எனவே, அவர் அங்கிருந்து அகன்று சென்று விட்டார்.பின்னர் பொலிசார் அவரது வீடு தேடி வந்தபோதுதான், தன் மகள் Nicole Guest (17), தான் எண்ணியதுபோல் அறையில் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதும்.
அவள் அந்த புதர் நிறைந்த பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள் என்ற அதிர்ச்சி தகவல் மார்க்குக்கு தெரியவந்தது. Nicole நீண்ட காலமாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறாள்.பல முறை அவளுக்கு மன நல ஆலோசகர்கள் ஆலோசனை கூற முயன்றபோதெல்லாம் வெளிப்படையாக பேச மறுத்திருக்கிறாள்.ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோருடனும் நன்றாக பேச ஆரம்பித்து, நண்பர்கள் கிடைத்து, மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று பெற்றோர் மகிழ்ந்திருந்த நேரத்தில் அவள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாள். Nicoleஇன் மரணம் அவளது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.