ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..! 2019-ல் அண்ணன் தற்கொலை… இப்போது தம்பி குடும்பமே அழியக் காரணமான அந்த விஷயம்… பகீர் கிளப்பிய ஆடியோ கிளிப்….!! – cinefeeds
Connect with us

CRIME

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..! 2019-ல் அண்ணன் தற்கொலை… இப்போது தம்பி குடும்பமே அழியக் காரணமான அந்த விஷயம்… பகீர் கிளப்பிய ஆடியோ கிளிப்….!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மகேஷ் என்பவரின் மொபைல் போனில் இருந்து ஒரு ஆடியோ பதிவைக் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அந்த ஆடியோவில், தங்களின் இந்த விபரீத முடிவுக்குத் தனது சொந்தக் குடும்பத்தினரே காரணம் என்று மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக, இந்த மரணங்கள் கொலையாக இருக்காது, ‘கூட்டுத் தற்கொலை’யாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.

இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில், பலியான லலிதா என்ற பெண்ணின் சகோதரர் ஆகாஷ் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், மகேஷின் சகோதரிகளான சுனிதா, சப்னா மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தம்பதியினரை நீண்ட நாட்களாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரபூபுரா காவல் துறையினர் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தற்பொழுது ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தத் துயரத்திற்குப் பின்னால் பெரும் சொத்துத் தகராறு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களது நிலத்தைக் கையகப்படுத்தியதற்காக அரசு வழங்கிய பெருந்தொகை இழப்பீட்டைப் பிரித்துக் கொள்வதில் குடும்பத்திற்குள் நீண்ட நாட்களாகப் பகை இருந்துள்ளது. இதே போன்ற குடும்பச் சண்டையின் காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் மகேஷின் மூத்த சகோதரரான ராகுல் என்பவர் ஓடும் ரயிலின் முன்பாகக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற திடுக்கிடும் உண்மையும் தற்பொழுது தெரியவந்துள்ளது.

இறந்த ஐந்து பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதனால் உள் உறுப்புகள் (Visera) இரசாயனப் பரிசோதனைக்காகப் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைக்குப் பிறகு நக்லா பதம் சிங் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து பேரின் உடல்களும், சோகமயமான சூழலில் கிராம மக்கள் மற்றும் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டன. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த பின் முழு விவரமும் அறிவிக்கப்படும் என கிரேட்டர் நொய்டா டிசிபி ஸ்ரவண் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in