LATEST NEWS
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது… பார்வையற்ற தாய், பேச முடியாத தந்தையின்.. ஒரே ஆதரவான 7 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் அருகே உள்ள ஜால்ராபாடனின் தீதர்வாயா கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் லோகேஷ், கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து திரும்பிய லோகேஷ், தனது தாயாருடன் வயலுக்குச் சென்றுள்ளான். தாய் சோயாபீன் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தபோது லோகேஷ் மாயமானான். தேடுதலின் போது அருகில் உள்ள ஒரு கிணற்றின் அருகே அவனது ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் செவ்வாய் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும், கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் இரவில் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து புதன்கிழமை காலை நடத்தப்பட்ட தேடுதலில் லோகேஷின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த லோகேஷ் தனது மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு ஒரே மகனாவான். அவனது தந்தை பேச முடியாதவர், தாய் பார்வைத் திறனற்றவர். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகவும் ஆதரவாகவும் இருந்த சிறுவனின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் குளிப்பதற்காக கிணற்றில் இறங்கினானா அல்லது தவறி விழுந்தானா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
