LATEST NEWS
“எங்கடா இருக்கு இந்த கைலாசா”?… பிரதமர் பதவியை நடிகை ரஞ்சிதாவுக்கு தூக்கிக் கொடுத்த நித்தியானந்தா… வைரல் செய்தி..!!
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை ரஞ்சிதா. இவர் 20 வருடங்களுக்குப் பின் தனது கேரியரில் ஒரு தொய்வை சந்தித்தார். இப்படியான நிலையில் நித்யானந்தா உடனான அறிமுகம் இவருக்கு ஏற்பட்டது. அதே சமயம் தமிழில் மற்றொரு இயக்குனரான மணிரத்தினத்தின் ராவணன் திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் சினிமாவா ஆன்மீகமா என்ற நிலை வந்த போது நித்தியானந்தா அடித்த நம்பிக்கையின் அடிப்படையில் பட வாய்ப்புகளை உதவி தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் சிஷ்யையாக ரஞ்சிதா மாறினார். நாளடைவில் நித்யானந்தா நாடு விட்டு நாடு ஓட வேண்டிய சூழல் ஏற்பட்ட சமயத்திலும் கூட ரஞ்சிதா அவர் கூடவே இருந்தார்.
இதற்கெல்லாம் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை தற்போது நித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் கைலாச நாட்டின் லிங்க்டு இன் இணையதள பக்கத்தில் ரஜிதாவின் பெயர் நித்தியானந்தா மாயி சுவாமி என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எங்கு உள்ளதை என்று தெரியாத ஒரு நாட்டிற்கு தனி கொடி, பாஸ்போர்ட்,நாணயம் என அனைத்தும் ஓவராக இருக்கும் நிலையில் அந்த நாட்டிற்கு அதிபர் மற்றும் பிரதமர் எல்லாம் தற்போது அறிவிக்கப்பட்டு விட்டனர்.
