தல.. தலதான்… நீங்க எப்பவுமே க்யூட்… யோகி பாபுவிடம் குழந்தைத்தனமாக விளையாடிய தோனி.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

தல.. தலதான்… நீங்க எப்பவுமே க்யூட்… யோகி பாபுவிடம் குழந்தைத்தனமாக விளையாடிய தோனி.. வைரல் வீடியோ..!!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக LGM என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தோனி அவரின் மனைவி சாக்ஷி தோனியுடன் பங்கேற்றார். மேலும் பட குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், LGM திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கேக்கை யோகி பாபுவும் தோனியும் இணைந்து வெட்டி உள்ளனர்.

Advertisement

ஆனால் அப்போது யோகி பாபு வெட்டுவதற்கு முன்பாக தோனி சின்ன கேக் பீஸ் ஒன்றை எடுத்து சாப்பிட்டார். உடனே யோகி பாபு தோனியை பார்க்க அவரும் க்யூடாக சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in