தேவாலயங்களை குறிவைத்து பயங்கரம்.. 47 கிறித்தவர்கள் கொடூரமாகப் படுகொலை.. உலகையே உலுக்கிய இனவெறித் தாக்குதல்..!! – cinefeeds
Connect with us

CRIME

தேவாலயங்களை குறிவைத்து பயங்கரம்.. 47 கிறித்தவர்கள் கொடூரமாகப் படுகொலை.. உலகையே உலுக்கிய இனவெறித் தாக்குதல்..!!

Published

on

எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் கிறித்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில், குறைந்தது 47 எத்தியோப்பிய கிறித்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய குழுக்கள் இப்பகுதிக்குள் நுழைவது குறித்துச் திருச்சபை தலைவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்குப் பலமுறை எச்சரித்தும், அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்தவிதப் தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த படுகொலையை அரங்கேற்ற பிராந்திய அதிகாரிகள் இஸ்லாமிய போராளிக் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாகத் தப்பிப்பிழைத்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அங்குள்ள தீவிரவாதிகள் கிறித்தவர்களை அம்காரா இனத்தவருடன் தொடர்புபடுத்திப் பார்த்து, எத்தியோப்பிய கிறித்தவர்களை ஒழிப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது. அப்பாவி கிறித்தவர்கள் மற்றும் அவர்களின் தேவாலயங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த இன மற்றும் மத ரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in